ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் தி.மு.க.,வினர் போராட்டம்

கோவை: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாமக்கல்லில் நேற்று ஆளுநரின் காருக்கு கறுப்புக் கொடி காட்டியதாக தி.மு.க.,வைச் 192 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் இந்தக் கைது சம்பவத்தைக் செய்யப்பட்டதைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் தி.மு.க.,வினர் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன், சேகர்பாபு, ரங்கநாதன், ஆ.ராசா, மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். 



இதனிடையே, சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், சாலையில் அமர்ந்தும் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, வால்பாறையிலும் தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வால்பாறை தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50-க்கு மேற்பட்டோரைப் போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று நீலகிரி மாவட்டம் உதகை காபிஹவுஸ் சதுக்கப் பகுதியில் தி.மு.க.,வினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...