கோவை: 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தவறாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'சூயஸ்' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கு, ரூ. 3,100 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகத் திட்டம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், குடிநீர் கட்டணம் உயருமா...? பொதுக் குழாய்கள் நீக்கப்பட்டு விடுமோ..? என்ற அச்சம் கோவை மக்களிடையே எழுந்துள்ளது. மேலும், கோவை குடிநீர் விநியோகம், தனியார் மயமாக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேசுகையில், "கோவையில் சுமார் ரூ. 3,000 கோடி செலவில் 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். பராமரிப்பு மட்டுமே தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார்.