அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்

கோவை : அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை : அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ சிறப்பு மாநாடு கோவையில் தனியார் அரங்கில் நடைபெறுகிறது. மாநாட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வேலையின்மையால் இளைஞர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற சூழலில், அரசுத்துறையில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. உடனடியாக அனைத்து பணியிடங்களையும் நிரப்பத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். 

மேலும், வட்டாரங்களில் உருவாகும் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு உதவி இயக்குநர் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நாளை நடைபெற உள்ள மாநாட்டில் பல்வேறு துறைச் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றியும், கோரிக்கைகளை வென்றெடுக்கும் இயக்க முடிவுகள் குறித்தும் பிரதிநிதிகள் விவாதித்து முடிவெடுக்க உள்ளனர். இம்மாநாட்டில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...