நீலகிரி : உதகையில் நிகழ்ந்த கோர விபத்துக்குக் காரணமான பழுதடைந்த பேருந்தை இயக்கக் கூறிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கூறி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 14-ம் தேதி உதகை அருகே மந்தடா எனும் இடத்தில் அரசு பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பத்திற்கு பழுதடைந்த பேருந்தை இயக்கியதுதான் காரணம் எனப் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்து விபத்தைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் உதகை மத்திய பேருந்து நிலையில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் சமிது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விபத்திற்குக் காரணமான பழுதடைந்த அரசு பேருந்தை இயக்கக் கூறிய கிளை மேலாளர், துணை மேலாளர், உதவி செயற் பொறியாளர், பொறியாளர் ஆகிய 4 அதிகாரிகள் மேல் கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், இனி இதுபோல, விபத்துக்கள் ஏற்படா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். உதகையில், முதலமைச்சர் அறிவித்தபடி, அரசு மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் செய்யது உள்பட ண100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.