கோவை பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் : மாநகராட்சியின் கட்டுப்பாட்டில்தான் குடிநீர் விநியோகத் திட்டம்

கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், குடிநீர் விநியோகத் திட்டம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், குடிநீர் விநியோகத் திட்டம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திட்டமும்...! அச்சங்களும்..!

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'சூயஸ்' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கு, ரூ. 3,100 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத் திட்டம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், குடிநீர் கட்டணம் உயருமா...? பொதுக் குழாய்கள் நீக்கப்பட்டு விடுமோ..? என்ற அச்சம் கோவை மக்களிடையே எழுந்துள்ளது. மேலும், கோவை குடிநீர் விநியோகம், தனியார் மயமாக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 

மாநகராட்சியின் கீழ் குடிநீர் திட்டம் :

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், 24 மணிநேரமும் குடிநீர் விநியோகத் திட்டத்தை கோவை மாநகராட்சிக்கு வழங்கியது. பின்னர், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இடையே ரூ. 556.57 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, கழிவுநீர் தொட்டிகள், நீர்த்தேக்கங்கள், தானியங்கி மீட்டர் சாதனங்கள், ரசீது இயந்திரங்கள், பல்க் வாட்டர் மீட்டர் மற்றும் குடிநீர் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன. 

நிதி ஒதுக்கீடு : 

கோவை மாநகராட்சியின் இந்த 24 மணிநேர குடிநீர் திட்டத்திற்கு, மத்திய அரசின் சார்பில் 33 சதவீத நிதியும், மாநில அரசில் 20 சதவீத நிதியும், முக்கிய பங்காக, கோவை மாநகராட்சியின் சார்பில் 47 சதவீதம் நிதியும் பகிரப்படுகிறது. 

திட்டத்தின் காலஅளவு : 

'சூயஸ்' நிறுவனமானது, அடுத்த 26 ஆண்டுகளுக்கு திட்ட ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அதில், ஒரு வருடம் ஆய்வுகட்டமாகும். அதைத் தொடர்ந்து, 4 ஆண்டுகளுக்கு கட்டமைப்புகள் மற்றும் பைப்புகள் புதைக்கும் பணிகள் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. பின்னர், 21 ஆண்டுகளுக்கு கோவை மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. 

'சூயஸ்' ஒப்பந்தத்தை பெற்றது எப்படி :

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் தகுதிக் பரிந்துரை ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் (ஜனவரி 04, 2017) முன்மொழிவு கோரிக்கையை அளிக்காததால், டெண்டர் கைவிடப்பட்டது. பின்னர், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 07-ம் தேதி மீண்டும் டெண்டர் அறிவிக்கப்பட்டது.

இதில், சூயஸ் நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் டெண்டரைக் கைப்பற்ற போட்டியிட்டன. ஆனால், இறுதிச் சுற்றில் இரு நிறுவனங்கள் தேர்வாகின. அதில், குடிநீர் விநியோகத்தில் அனுபவமிக்க சூயஸ் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை மாநகராட்சிக்கம், சூயஸ் நிறுவனத்திற்கும் இடையே குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம், கடந்த ஜனவரி 8-ம் கையெழுத்தாகியது. 

திட்ட உள்கட்டமைப்பு :

முதற்கட்டமாக, மாநகராட்சியின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டும் பகுதிகள் (பழையது 72 வார்டுகள்/ தற்போது 60 வார்டுகள்) வரையறுக்கப்பட்டன. அதனடிப்படையில், குடிநீர் விநியோகம் செய்வதற்கான கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அடுத்த 4 ஆண்டுகளுக்குள் பைப்புகளை புதைத்தல், நீர்தேக்கத் தொட்டிகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 

கட்டணம் மற்றும் தானியங்கி மீட்டர் :

நுகர்வோர்கள் தங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள குடிநீர் அளவு குறித்து தெரிந்து கொள்ள தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்படும். மேலும், குடிநீர் கட்டணம், அனைத்தும் கணினி வாயிலாகவே வழங்கப்படும். மேலும், குடிநீருக்கான கட்டணமும் தானியங்கி வசதியின் மூலமே பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, குடிநீர் கட்டணம், தமிழக அரசின் கட்டண விதிகளுக்குட்பட்டு, கோவை மாநகராட்சியின் மூலமே நிர்ணயம் செய்யப்படும். 

குடிநீர் விநியோக திட்ட ஒப்பந்தம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், கோவை மாநகராட்சியின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனுபவமிக்க ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தினால், பொதுமக்களுக்கு எந்தவித கட்டணச் சுமையும் விதக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...