திருப்பூர்: ஆசிய துணை கண்டமே திரும்பி பார்க்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பல்லடம் தொகுதிகளுக்குட்பட்ட அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை மற்றும் பல்லடம் புதிய கல்வி மாவட்டமாக்கும் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆசிய துணை கண்டமே தமிழகக் கல்வித்துறையை திரும்பிப் பார்க்கின்ற வகையில் 12-ம் வகுப்பு முடித்தவுடனே வேலை வாய்ப்பு, அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் , 'கியூ.ஆர்' கோடுடன் கூடிய பாடப்புத்தகங்கள், 8-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வை-பை வசதி ஆகியவை செய்யப்படவுள்ளது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றியமைக்கப்படும், இவ்வாறு கூறினார்.

முகம் சுழிக்கும் பேச்சு:
முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது :- எஜமானருக்கு நன்றியுள்ள பிராணியாக உள்ள நாய் எப்படியோ, அதுபோல ஜெயலலிதாவிற்கு நன்றியுள்ளவராக உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்ததால் வீட்டுவசதித்துறையைப் பெற்றார். அதிலும், சிறப்பாக செயலாற்றினார், அதுபோல, தற்போதுள்ள கால்நடை பராமரிப்புத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார், என்றார். அரசு நிகழ்ச்சியில் பொதுமேடையில் சக அமைச்சரைப் பிராணியோடு ஒப்பிட்டு அமைச்சர் செங்கோட்டையன் பேசியது கட்சியினர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.