நடிகர் விஜயின் 62-வது படமான 'சர்கார்' திரைப்படத்தின் போஸ்டர்கள் தற்போது சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும், டிகர் விஜயின் 62-வது படமாக உருவாகும் படத்திற்கு சர்கார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயரும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படம், வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நேற்று நள்ளிரவில், சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். தற்போது, இந்தப் படத்தின் பெயரில் ஹேஸ் டேக் (#sarkar) உருவாக்கப்பட்டு, டுவிட்டரில் முதல் டிரெண்டாக உள்ளது. இதேபோல, ஃபேஸ்புக்கிலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை, விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.