ரயில் நிலையத்தில் செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம்!: இன்று முதல் அமல்

கோவை: உயிரிழப்புக்களை தடுக்கும் பொருட்டு ரயில் நிலையத்தில் செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம் என்கிற புதிய சட்டம் நடைமுறையில் வர உள்ளது.



கோவை: உயிரிழப்புக்களைத் தடுக்கும் பொருட்டு ரயில் நிலையத்தில் செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம் என்கிற புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று சர்வதேச செல்பி தினம் கொண்டாடப்பட்டது. உலகம் முழுக்க மக்கள் இதற்காக வித்தியாசமான செல்பி போட்டு கொண்டாடிக்கொண்டு இருந்தனர். அதற்கு மறுநாளே இன்று, இந்தியாவில் வித்தியாசமான சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதன்படி, இனி ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ரயில் நிலையத்திற்கு வெளியே மட்டுமே இனி செல்பி எடுக்க முடியும்.

சில நாட்களுக்கு முன், ஒரு இளைஞர் ரயிலுக்கு முன் செல்பி வீடியோ எடுக்க சென்று பலியானார். இதே போல் செல்பி வீடியோ எடுக்க முயன்ற பலர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் படி ரயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...