டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: திருப்பூரில் மக்கள் சாலை மறியல்

திருப்பூர்: பொதுமக்களுக்கு இடையூறாக புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பொதுமக்களுக்கு இடையூறாக புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



மாநகராட்சியின் 51-வது வார்டுக்கு உட்பட்ட திருப்பூர்-தாராபுரம் சாலையில் வேலாயுதசாமி மண்டபம் எதிரில் உள்ள காலி இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. 

கடை திறப்பதற்கு அப்பகுதியினர் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு புதிய கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதி அருகிலே உள்ள நிலையில், புதிய டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று கூறி அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மற்றும் டாஸ்மாக் அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடையை அகற்றிக்கொள்வதாக அலுவலர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...