சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: 3 குடும்பத்தினர் தற்கொலை முயற்சி

தர்மபுரி: விவசாய நிலங்களை பாதிக்கும் சேலம் - சென்னை இடையிலான 8 வழி பசுமை சாலையை எதிர்த்து தர்மபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியில் 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தர்மபுரி: விவசாய நிலங்களை பாதிக்கும் சேலம் - சென்னை இடையிலான 8 வழி பசுமை சாலையை எதிர்த்து தர்மபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியில் 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் 277 கி.மீ., தொலைவில் புதிய 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சாலையால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள், வீடுகள், பாசன கிணறுகள் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கையகப்படுத்தப்படும் நிலங்களின் விபரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

எனவே, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பின் சார்பில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் அரசும் கடும் தீவிரம் காட்டிவருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் 8 வழி பசுமை விரைவுச்சாலை 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1,846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலங்களை அளவீடு செய்து, முட்டுக்கல் நடும் பணிகள் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சந்திரகுமாரின் என்பவரின் நிலத்தை அளந்த அதிகாரிகள் கற்களை நாட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரும், அவரது மனைவி மணி, மகன்கள் பாலன், தமிழரசன் மகள் சுபா ஆகியோர் உடலில் மண்ணெண்ணை ஊற்ற முயன்றனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவரின் குடும்பத்தினர் உள்பட 9 பேர் தீக்குளிக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது.

ஒரே நேரத்தில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அறிந்ததும், கிராம மக்கள் அப்பகுதியில் திரள ஆரம்பித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்வதை கைவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...