கோவை : வால்பாறை அருகே சிறுத்தைப்புலி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வால்பாறையை அடுத்த புதுக்காடு தேயிலை தோட்டத்தில் 1 ஏ- என்.சி.-ல் இன்று காலை தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள தேயிலை செடிபுதர் மறைவில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, இறந்து கிடந்த சிறுத்தைப்புலியின் உடலைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
"சிறுத்தைப்புலியின் உடலில் காயங்கள் இருந்ததுடன் மற்ற விலங்குகள் சாப்பிட்ட தடயம் இருக்கிறது. இறந்த ஆண் சிறுத்தை சுமார் 4 வயது மதிக்கத்தக்கது. நாளை நடைபெறும் உடல்கூறு ஆய்வுக்குப்பின் தான் சிறுத்தை எவ்வாறு இறந்தது என்பது தெரிய வரும்." என வனத்துறையினர் கூறினர். மேலும், சிறுத்தைப்புலியின் மரணம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.