கோவை: அதிக பயணிகளை ஏற்றுவதற்காக கோவை மாநகர் பகுதிகளில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பின் இருக்கைகள் அகற்றப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.

கோவை மாநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புறநகர் பகுதிகளுக்கும் நூற்றுக்கணக்கில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், கூலி வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
தொழில்போட்டிக் காரணமாக தனியார் மற்றும் அரசு பேருந்துகளிடையே பயணிகளை அதிகமாக ஏற்ற வேண்டும் என்பதற்காக பேருந்துகளில் உள்ள பின் இருக்கைகளை அகற்றப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், இருக்கையில் 6 பேர் பயணிக்கக்கூடிய நிலையில் இருக்கையில்லாமல் 12 பேர் வரை பயணிக்க முடியும்.

இந்தப் புகாரை மறுக்கும் கோவை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர், தனியார் பேருந்துகளில் மட்டுமே இது போன்ற காரியங்கள் செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இதுபோன்று செய்யக்கூடாது என தெரிவித்துள்ளதாக அவர் நம்மிடம் கூறினார்.
இது தொடர்பாக, கோவையை அடுத்த கணுவாய் பகுதிக்குப் பயணிக்கும் பயணி ஒருவர் நம்மிடம் கூறுகையில், "பெரும்பாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் சொகுசு பேருந்துகள் தான் வருகின்றன. பயணச்சீட்டு அதிகமாக இருந்தாலும், வேறு வழியில்லாமல் அதில் பயணிக்கின்றோம். ஆனாலும் கூட அதில் பின் இருக்கைகள் இல்லாமல் நின்று கொண்டே பயணிக்கும் சூழலில் தான் உள்ளது," என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில், "வருவாய் காரணமாக தனியார் பேருந்துகளில் இதுபோன்று செய்யப்பட்டாலும் அரசு பேருந்துகளில் வருவாய்க்காக மட்டும் இது போன்று செய்யப்படுவதில்லை. பெரும்பாலும் அரசு தரப்பில் சொகுசு பேருந்துகளில் தான் இது மாதிரி செய்யப்படுகிறது. அவர்களிடம் போதுமான உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் தான் இது போன்று செய்யப்படுகிறது. சொகுசு பேருந்துக்கான பேருந்து பயணம் செய்ய அதிக பணம் வசூலிக்கப்பட்டும் கூட மக்கள் ஏன் நின்று கொண்டு பயணிக்க வேண்டும். கோவை மாநகரின் பல பகுதிகளில் பல்வேறு வழித்தடங்களில் இதுபோன்று அரசு சொகுசு பேருந்துகளில் பின் மற்றும் முன் இருக்கைகள் இல்லாமல் தான் இயக்கப்படுகின்றது," என்றார்.
தனியார் பேருந்துகள் பெரும்பாலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பேருந்துக்கான உரிமம் வாங்கும் போதும், அதன்பின் அதனைப் புதுப்பிக்கும் போது இருக்கைகள் இருக்கின்றன. அதற்குப் பிறகு, அதனை அகற்றிவிடுகின்றனர் என்பது தான் பிரதானக் குற்றச்சாட்டாக உள்ளது.
இது குறித்து கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் உதய்குமார் கூறுகையில், "இது போன்ற எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. அவ்வாறு இருப்பின், புகார் தெரிவித்தால் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.