கோவை: தொலைக்காட்சி விவாத மேடையில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய வழக்கில் நடிகர் அமீர் கோவை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரிய வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் கடந்த 9-ம் தேதி கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகர் அமீர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, அமீரின் கருத்துக்கு பா.ஜ.க.,வினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அமீர் மீதும் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் அதன் நிரூபர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கோவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமீன் வழங்க கால அவகாசம் கேட்டு வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மேலும், விசாரணைக்கு வரும் வரை அமீரை கைது செய்யக் கூடாது என போலீசாருக்கு நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பவானி மோகன் மற்றும் வழக்கறிஞர்கள் விஜயராகவன் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.