அணையில் இருந்து வரும் நீர் அடைத்து வைக்கப்பட்டதாக வதந்தி: கோவையில் இளைஞர் கைது

கோவை: அணையிலிருந்து வரும் நீரை அடைத்து வைத்ததாக முகநூலில் வதந்தியைக் கிளப்பி, பொதுமக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கோவையில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: அணையிலிருந்து வரும் நீரை அடைத்து வைத்ததாக முகநூலில் வதந்தியைக் கிளப்பி, பொதுமக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கோவையில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால், அனைத்து பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கீழ் சித்திரைச்சாவடிப் பகுதியைக் கடந்து வரும் தண்ணீரை பொதுமக்கள் சிலர் தடுப்பணையில் அடைத்து வைத்துள்ளதாக முகநூலில் செய்தி பரவியது. இதனால், தொண்டாமுத்தூர் மற்றும் பேரூர் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து கீழ் சித்திரைச்சாவடி மக்களுக்கு எதிராக பிரச்சனை ஏற்படுத்தும் சூழல் உருவானது.

இதனால், இதன் உண்மைத் தன்மையை ஆராய மேற்கு மண்டல பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், தடுப்பணைகளில் எந்த தடுப்பும் வைக்கவில்லை. தண்ணீர் வழக்கம்போல அனைத்து பகுதிகளுக்கும் சென்று கொண்டிருந்தது. இந்தத் தகவலை பொதுமக்களுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் அமைதி ஏற்பட்டது.

இதனிடையே, முகநூலில் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் வகையில் பொய்யான தகவலைப் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உதவி பொறியாளர் சிவகுமார் தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், முகநூலில் வதந்தியைக் கிளப்பிய மதுக்கரையைச் சேர்ந்த ராஜனின் மகன் சுரேஷ்குமார் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...