கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்காக பெங்களூரு சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை கோவைக்கு கொண்டு வரப்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்காக பெங்களூரு சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை கோவைக்கு கொண்டு வரப்பட்டது.

மொத்தம் 7,370 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 4,000 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் இன்று அதிகாலை துணை சுகாதார அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

ஐந்து வாகனங்கள் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்ட அந்த இயந்திரங்கள் துணை சுகாதார துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
மேலும், அந்த இயந்திரங்கள் 24 மணி நேர காவல்துறை கண்காணிக்கப்படும் என்றும் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.