ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் ஆளுநர் வோராவின் ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் ஆளுநர் வோராவின் ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் பி.டி.பி., கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க., திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மெஹபூபா முஃப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்துவதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். எதிர்க்கட்சி ஆட்சி அமைக்க முன் வராததால் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.வி.ஆர்., சுப்ரமணியனை புதிய தலைமை செயலாளராக ஆளுநர் வோரா நியமித்துளார்.
அத்துடன் ஆளுநரின் ஆலோசகராக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி.விலாஸ் ஆகியோர் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுகொன்ற அதிரடிப்படையினருக்கு விஜயகுமார் ஐ.பி.எஸ்., தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.