கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: பத்துக்கு மேற்பட்ட பயணிகள் படுகாயம்

கோவை: பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

கோவை: பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி என்ற பகுதியில் தாராபுரத்திலிருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பல்லடம் நோக்கி காடா துணிகளை ஏற்றிக்கொண்டு மினி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.



பெரும்பாளி என்ற பகுதிக்கு வந்த பொழுது எதிரே வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மினி ஆட்டோ மோதியது. ஆட்டோ பேருந்தின் மீது மோதிய வேகத்தில் பேருந்தின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் ஆறுமுகம் (47), பயணிகள் சுப்பம்மாள் (40), செல்வி (42) உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கும், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் அதி வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



இந்த நிலையில், தப்பியோடிய விபத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுனரை பல்லடம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...