திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற யோகா தின விழாவில் யோகா செய்த ஆறு வயது சிறுமி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பள்ளியில் இன்று சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. விழாவில் மேற்கு மண்டல காவல் தலைவர் பாரி, ராம்ராஜ் காட்டன் நாகராசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா செய்தனர். விழாவின் இறுதியில் திருப்பூர் பாண்டியன் நகர் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவி திவ்யா ஶ்ரீ கடுமையான ஆசனங்களையும் மிக சுலபமாக செய்து பார்வையாளர்கள் அனைவரையும் அசத்தினார்.

இறுதியில் மாணவி திவ்யா ஶ்ரீ திறமையை பாராட்டி சிறப்பு விருந்தினர்கள் அவருக்கு வெகுமதி வழங்கிப் பாராட்டினர்.