சென்னை: பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் பா.ஜ.க., பிரமுகர் எஸ்.வி., சேகருக்கு சென்னை எழுமபூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக, தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். எனவே அவரை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், பத்திரிகையாளர்கள் சார்பில் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரிய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெறுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், எஸ்.வி. சேகர் ஆஜராகாமல், உல்லாசமாக சுற்றித் திரிந்து வந்தார்.
இதனிடையே, எழும்பூர் நீதிமன்றம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராக எஸ்.வி. சேகருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. அதன்படி, பலத்த பாதுகாப்புக்கிடையே எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது, இந்த வழக்கில், ஜாமீன் அளிக்குமாறு எஸ்.வி. சேகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதுடன், மீண்டும் 18-ம் தேதி ஆஜராக எஸ்.வி. சேகருக்கு உத்தரவிட்டார்.