தமிழக முதலமைச்சரை 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைக்கும் சத்குரு

கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை ஈஷா யோகா சத்குரு 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை ஈஷா யோகா சத்குரு 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைப்பு விடுத்துள்ளார்.



கிரிக்கெட் வீரர் விராத் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பிரதமர் மோடிக்கு சவால் விட்டார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர், தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து, பலரும் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'பிட்னஸ் சேலன்ஞ்சை எதிர்கொள்ளுமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் சத்குரு அழைப்பு விடுத்துள்ளார்.



அவரது அழைப்பை ஏற்று, அரசியல் பிரமுகர்கள் ஈஷா யோகா மையத்திற்கு வருவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...