மதுரை : எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைய உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை : எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2000 கோடியில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என 2015-16ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, செங்கல்பட்டு, பெருந்துறை, தோப்பூர், செங்கிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து அனுப்பினார். இதையடுத்து, இந்த இடங்களை மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். ஆனால், இதுவரை எந்த இடத்தில் எய்ம்ஸ் அமையப்போகிறது என்ற தகவலை மத்திய அரசு வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தேர்வு செய்ய ஜூன் 14-ம் தேதி வரை உயர் நீதிமன்ற கிளை கெடு விதித்திருந்தது. ஆனால், மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
இந்நிலையில், இன்று மதுரை மேலூரில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார், எய்ம்ஸ் அமைப்பதற்காப ஆணை சற்றுமுன் வந்திருப்பதாகவும், மதுரை தொப்பூர், தஞ்சை செங்கிப்பட்டி உள்பட 5 இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாக கூறினார்.
