சேலம்: சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் சமூக ஆர்வலர் பியூஷ் மானூஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை அமைப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்த சாலை அமைக்க மாநிலம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையிலும் அரசு விடுவதாய் இல்லை.
இந்த திட்டத்திற்கு எதிராக கருத்து கூறி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.
முன்னதாக, இந்த பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார்.
இந்த சூழலில், பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள அவரை சேலம் ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.