கோவை: 15 ஆண்டுகளுக்குப் புத்துயிர் பெற்ற வெள்ளலூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

வெள்ளலூர் கிராமத்திலுள்ள வெள்ளலூர் குளத்தை முன்மாதிரியாக உருவாக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக மியாவாக்கி முறையில் 1,000 மரக்கன்றுகள் வைக்கப்பட்டன. ஒரு அடியில் நடவு செய்யப்பட்ட செடிகள், தற்போது 7 அடி உயரம் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், உக்கடம் வாலாங்குளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆகாயத் தாமரைகள் மற்றும் காய்கறி கழிவுகளையும், மாட்டுச் சாணத்தையும் இயற்கை உரமாகக் கொண்டு இரண்டாம் கட்டமாக மியாவாக்கி முறையில் 1,001 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன. இந்தக் களப்பணியில் 60 குழந்தைகள் உட்பட 200 தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.