குடியிருப்புகளுக்குள் பரவிய பஞ்சுகள் அப்புறப்படுத்தல்: பங்கஜாமில்லில் பஞ்சுகள் வெளியேறாமல் இருக்க வலைகள் அமைப்பு

கோவை: கோவை அருகே பங்கஜாமில்லில் இருந்து பஞ்சுகள் வெளியேறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், குடியிருப்புகளுக்குள் பரவிக் கிடந்த பஞ்சுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

கோவை: கோவை அருகே பங்கஜாமில்லில் இருந்து பஞ்சுகள் வெளியேறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், குடியிருப்புகளுக்குள் பரவிக் கிடந்த பஞ்சுகள் அப்புறப்படுத்தப்பட்டன.



புலியகுளம் அருகே உள்ள பங்கஜாமில் பல வருடங்களாக இயங்கி வருகிறது. தேசிய பஞ்சாலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த பஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பஞ்சாலையில் இருந்து வெளியேறிய பஞ்சுகள் பெரியார் நகர் பகுதி குடியிருப்புகளுக்குள் பரவியது. சாலையெங்கும் பனி போல படர்ந்திருந்த பஞ்சுகள், வீடுகள், மரங்கள் உள்ளிட்டவற்றிலும் படிந்தன.



மேலும், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் பஞ்சு படர்ந்ததோடு, உணவு பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றிலும் கலந்ததால் உடல் நலக்குறைவு ஏற்படுமென பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்தச் செய்தி நேற்று ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், இன்று காலை முதல் பெரியார் நகரில் படர்ந்திருந்த பஞ்சுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் பஞ்சாலை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.



இது குறித்து பங்கஜாமில் அதிகாரிகள் கூறியதாவது:- மில்லில் இருந்து கழிவு பஞ்சுகள் எதுவும் வெளியேறவில்லை. நுண்ணிய பஞ்சு துகள்களை பிரித்தெடுக்கும் வலை கிழிந்ததால், நல்ல பஞ்சு வெளியேறியது. கிழிந்த வலை உடனடியாக சரி செய்யப்பட்டு பஞ்சு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் இருக்க வலையில் பில்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...