கோவை: வால்பாறையில் மனித உயிர்களை வேட்டையாடி வரும் சிறுத்தைப்புலியை பிடிக்காத வனத்துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையிலும் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறையில் கடந்த ஒருமாத காலத்தில் சிறுத்தைப்புலி தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர். நேற்று மாலை காஞ்சமலை தேயிலை தோட்டத்தில் வீட்டின் முன் துணி துவைத்துக் கொண்டிருந்த கைலாசவதி (52) என்ற பெண்ணை சிறுத்தை தாக்கிக் கொன்றது. இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், சிறுத்தைப்புலி தாக்கி இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என 1,000-க்கும் மேற்பட்டவர்கள் வால்பாறை தபால்நிலையம் முன்புறம் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும், நடத்தப்பட்ட இந்த மறியல் போராட்டம், தபால் நிலையத்தில் இருந்து அக்காமலை சாலை, காந்தி சிலை வளாகம், ஸ்டான்மோர் சந்திப்பு புதிய பேருந்து நிலையம் வரை நீடித்தது.

மேலும், வால்பாறை நகரில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து மற்றும் வாடகை வாகனங்களின் சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வால்பாறையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தரசு, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட வன அலுவலர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே, வால்பாறையில் சிறுத்தைப்புலி தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு வனத்துறையின் மெத்தனப் போக்கே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.