கல்லார் அரசு பழப்பண்ணையில் அரிய வகை துரியன் பழங்களின் சீசன் தொடக்கம்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் அரசு பழப்பண்ணையில் அரிய வகை துரியன் பழங்களின் சீசன் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் முன்பதிவு செய்து இந்தப் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் அரசு பழப்பண்ணையில் அரிய வகை துரியன் பழங்களின் சீசன் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் முன்பதிவு செய்து இந்தப் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

மலேசியாவைத் தாயகமாக கொண்ட துரியன் பழங்கள் நம் நாட்டில் மிகக் குறைந்த மலைசார்ந்த பகுதிகளிலேயே விளைகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லார் மற்றும் பர்லியார் பகுதிகளில் இவ்வகை துரியன் பழ மரங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளன.



நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை பகுதியில் ஆண்டு முழுவதும் சீரான சீதோஷின நிலை நீடிப்பதால், இங்கு துரியன் பழ மரங்கள் செழித்து வளர்கின்றன. துரியன் பழங்களின் சீசன் ஜூன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இப்பண்ணையில் விதைக்கப்பட்ட இம்மரங்கள் ஒவ்வொன்றும் தற்போது சுமார் 200 அடிக்கும் மேல் மிக உயரமாக வளர்ந்துள்ளது.

தற்போது சீசன் துவங்கியுள்ளதால் இந்த மரங்களில் நூற்றுக்கணக்கான துரியன் பழங்கள் காய்த்துள்ளன. முட்கள் நிறைந்த உயரமான இம்மரங்களில் ஏறி பழங்களை பறிப்பது அவ்வளவு சுலபமல்ல. எனவே, இதில் உள்ள பழங்கள் பழுத்துத் தானாக விழும் வரை காத்திருந்து, துரியன் பழங்களை சேகரிக்கின்றனர். சிறிய வகை பலாப்பழங்களை போல் முட்களோடு காட்சியளிக்கும் இப்பழங்களை உடைத்தால், உள்ளே நான்கு சுளைகள் கொண்ட பழங்கள் காணப்படும்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிட்டாத தம்பதிகள், இவற்றை உண்டால் குழந்தைப்பேறு கிட்டும் என பரவலாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டில் சில மாதங்களில், அதிலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் இப்பழங்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. பலரும் இங்குள்ள அரசு பழப்பண்ணைகளில் ஏற்கனவே முன்பதிவு செய்து, தற்போது இப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். கல்லார் பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் விளையும் துரியன் பழங்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள பழக்கடைகளிலும் விற்கப்பட்டு வருகின்றன.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...