வாய்க்கால், ஆறுகளை தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களை தூர்வாருதல் போன்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

கோவை : கோவை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களை தூர்வாருதல் போன்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார். 



கோவை மாநகராட்சியில் 85வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் சேத்துமாவாய்க்காலில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக தூர்வாரப்பட்டுள்ளதையும், பொக்ளின் எந்திரம் மூலமாக மேலும் பணிகள் மேற்கொள்வதையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கிரீன் பார்க் பகுதியில் உள்ள வாய்க்காலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், 76-வது வார்டு, எல்.ஐ.சி காலனியில் உள்ள சேத்துமாவாய்க்கால் பகுதியினை பார்வையிட்டார்.



பின்னர், வாய்க்காலில் மழைநீர் செல்வதற்காகவும் அதிக மழையின்போது குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வழிந்தோடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தேவையான பணிகளை மேற்கொள்ளவும், கழிவு நீர் செல்ல வாய்க்கால் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். குறிச்சி என்.பி.இட்டேரி மற்றும் போத்தனூரில் 95-வது வார்டு பேச்சியம்மன் கோயில் தெருவில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்வதையும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....