நீலகிரியின் தந்தை சல்லிவனின் பிறந்த நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை

நீலகிரி : நீலகிரியின் தந்தை சர் ஜான் சல்லிவனின் 230-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மலர்தூவி மரியாதை செய்தார்.

நீலகிரி : நீலகிரியின் தந்தை சர் ஜான் சல்லிவனின் 230-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மலர்தூவி மரியாதை செய்தார். 

நீல மலைகளையும், பள்ளத்தாக்கு காட்சிகளையும் கொண்ட மலைகளின் அரசியாக திகழும் நீலகிரி மாவட்டத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் சர் ஜான் சல்லிவன். இவரது 230-வது பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜுன் 15-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

ஆங்கிலயேர் ஆட்சி காலத்தில் 1817-ம் ஆண்டில் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சல்லிவன், 1819-ம் ஆண்டு மலையேற்ற பயணமாக நீலகிரிக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும் முக்கிய பங்காற்றினார். இதனால், முதன்முதலாக அவர் தங்கிய கன்னேரிமுக்கு கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், ஆண்டுதோறும் சல்லிவனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

நீலகிரியை உலகிற்கு அறிமுகம் செய்ததோடு, தேயிலை, கேரட், உருளைக்கிழங்கு மட்டுமல்லாது, பல்வேறு ஆங்கில காய்கறிகளை மற்றும் பழங்களை மாவட்டத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன்மூலம், மாவட்ட பொருளாதாரத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த காரணமாக நீலகிரியின் தந்தை என்று சர் ஜான் சல்லிவன் அழைக்கப்படுவதுண்டு. 

இந்த நிலையில், அவரது 230-வது பிறந்த நாளையொட்டி கன்னேரிமுக்கு கிராமத்தில் அமைந்துள்ள சல்லிவன் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....