கோவை: கோவையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிட்டி பாபு (39). இவரை கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி கண்ணன், சந்தோஷ், சக்தி வேல் மற்றும் சுரேஷ் ஆகியோர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதில், சந்தோஷ் என்பவரை தவிர மற்ற மூவரையும் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, தலைமறைவான சந்தோஷ் என்பவரைத் தேடி வந்தனர். இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தலைமறைவாக இருந்த திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இவர்கள் மீது ஏற்கனவே, கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே, 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை மத்திய சிறையிலடைத்தனர்.