சென்னை: தினகரன் ஆதரவில் உள்ள 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.,க்களில், ஆட்சி நீடிக்க 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவைப்படுகிறார்கள்.
தற்போது அ.தி.மு.க.,வுக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் அடிப்படியில் தற்போது ஆட்சி நீடிக்க 109 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு போதுமானது.
அதே நேரத்தில், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டால், அ.தி.மு.க., தனது பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.,க்களை தன் வசம் வைத்திருக்க வேண்டும்.
அதனால், எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை நிரூபிக்க முடியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க., நாளேடான நமது அம்மா பத்திரிகை சார்பில், அந்த 18 எம்.எல்.ஏ.,க்களுக்கும் மறைமுகமாக அழைப்பு விடுத்து பதினெண்கீழ்க்கணக்கு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிட்டு பாசமழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.