பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் தென்மேற்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் தென்மேற்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள், பூங்காக்கள், மேம்பாட்டுப் பணிகள், ஏரிகள், 24 மணி நேர குடி நீர் விநியோகப் பணிகள் குறித்தும்,பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

பருவமழை

தென்மேற்கு பருவமழையையொட்டி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான மணல் மூட்டைகள் மற்றும் பணியாளர்களை தேவையான இடங்களில் தயார்நிலையில் வைத்திருக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

மேலும், மாநகராட்சியிலுள்ள குளங்கள், ஏரிகள், குட்டைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்தும், வாய்க்கால்கள் ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்தும், தூர்வாரப்பட்டுள்ள வாய்க்கால்களை பராமரித்தல் குறித்தும், சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் என்.நடராஜன், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் த.ஞானவேல், மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டங்கள்;) எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...