வால்பாறை: வால்பாறை சுரங்க கால்வாய் அருகே செல்பி எடுத்த வாலிபர் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை: வால்பாறை சுரங்க கால்வாய் அருகே செல்பி எடுத்த வாலிபர் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறையை அடுத்த நல்லகாத்து பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (35). இவரும் இவரது நண்பர்களும் வெள்ளமலை சுரங்க கால்வாய்க்கு இன்று சென்றனர். அங்கு ஜெயபிரகாஷ் செல்பி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரில் விழுந்து மூழ்கி மாயமானார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மாயமானவரைத் தேடி வருகின்றனர். மேலும், அவருடன் சென்ற நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.