பரீட்சார்த்த முறையில் 'ஓஃபோ' மிதிவண்டி பகிர்தல் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் - ஸ்மார்ட் சிட்டி அதிகாரி

கோவை: சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த 'ஓஃபோ' மிதிவண்டி பகிர்தல் திட்டம், விரைவில் குறைந்தபட்ச கட்டணத்தோடு முழு பயன்பாட்டிற்கு வர இருப்பதாக ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த 'ஓஃபோ' மிதிவண்டி பகிர்தல் திட்டம், விரைவில் குறைந்தபட்ச கட்டணத்தோடு முழு பயன்பாட்டிற்கு வர இருப்பதாக ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டி பகிர்தல் திட்டம் கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி கோவை மாநகராட்சியால் தொடங்கப்பட்டது. சுமார் ரூ.38 கோடி முதலீடு செய்து பரீட்சார்த்த முறையில் இத்திட்டத்தை செயல் படுத்த ஓஃபோ என்கின்ற சீன நிறுவனம் முன்வந்தது.

2000 மிதிவண்டிகள்

இதனையடுத்து, சோதனை அடிப்படையில் பல்வேறு கல்லூரி வளாகங்களில் ஓஃபோ மிதிவண்டி பகிர்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2000 மிதிவண்டிகளை மாநகர பகுதிகளில் அறிமுகம் செய்தது.

மிதிவண்டி பகிர்தல் திட்டம் குறித்த மக்களின் மனநிலையையும், பயன்பாடு குறித்த தகவல்களை திரட்டவும் சோதனை அடிப்படையில் இத்திட்டம் கடந்த மூன்று மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வந்தது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவக் கூடிய மிதிவண்டி பகிர்தல் திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலானோர் ஓஃபோ மிதிவண்டிகளை முறையாக பயன்படுத்தி வந்தனர். 

சேதம் 

ஆனால், வெகுசிலர் மிதிவண்டிகளை சேதப்படுத்தி வீட்டுக்குள் வைத்துக் கொண்டனர். ஜி.பி.எஸ் உதவியோடு இதனை கண்டறிந்த ஓஃபோ நிறுவனத்தினர் அவற்றை திரும்பப் பெற்று, பழுதை சரி செய்தனர்.



இந்நிலையில், ஓஃபோ நிறுவனத்தினர் தங்களது சோதனைகளை முடித்துக் கொண்டு, மிதிவண்டி பயன்பாடு குறித்த தகவல்களை ஆய்வு செய்ய தொடங்கியது. இதனால், மிதிவண்டி பகிர்தல் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், "சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த மிதிவண்டி பகிர்தல் திட்டம், கோவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திட்டம் குறித்து சிறியவர் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பினரின் கருத்துகளும், பயன்பாடு பற்றிய தகவல்களும் ஓஃபோ நிறுவனத்தால் திரட்டப்பட்டுள்ளது. 

விரைவில், அந்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு முழு பயன்பாட்டிற்கான திட்டம் அறிவிக்கப்படும். குறைந்த கட்டண சேவையோடு மீண்டும் மிதிவண்டி பகிர்தல் திட்டம் நகரில் தொடங்கப்படும்." என்றார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...