வால்பாறையில் தொடரும் கனமழை: தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால், தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால், தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் பெய்து வரும் நிலையில், வால்பாறையில் பல இடங்களில் சாலைகள் மண் சரிந்து சேதமடைந்துள்ளன. இந்நிலையில், வால்பாறை நகரை ஒட்டிச் செல்லும் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டது. மேலும், சிறுவர் பூங்கா பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.



இதேபோல, நகராட்சி சுற்றுலா மாளிகையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக கேரள செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் வறட்டுப்பாறை என்ற இடத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மேற்பகுதியில் இருந்து ராட்சத மரங்கள் மற்றும் பாறைகள் சாலையில் விழுந்தன. வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இச்சாலையில் சென்ற வண்ணம் இருந்தன. அதிர்ஷ்டவசமாக எந்த விபத்தும் ஏற்படவில்லை.



இதேபோல, சோலையார் அணைக்கு செல்லும் மாற்றுப்பாதையான பன்னிமேடு சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டதால் வால்பாறை - சோலையார் அணை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் சாலையில் கிடக்கும் மண், கற்களை அகற்றினர். இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனிடையே, வால்பாறையில் பலத்த மழை காற்று காரணமாக காமராஜ் நரில் மல்லிகா என்பவரது வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...