கோவை: கோவையில் ஊடகத்துறையினர் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது காவல்துறையினரின் அப்பட்டமான ஜனநாயக விரோதப் போக்கு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் மாவட்ட செயலாளர் வி. இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தனியார் (புதியதலைமுறை) தொலைக்காட்சியின் சார்பில் வட்டமேசை விவாத அரங்கு கோவையில் கடந்த வெள்ளியன்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் பங்கேற்று கருத்தை முன்வைத்தனர்.
இதில், பங்கேற்ற பா.ஜ.க.,வினர் கருத்துக்களை எதிர்கொள்ள துணிவில்லாமல் ரகளையில் ஈடுபட்டனர். குறிப்பாக, இயக்குநர் அமீர் சொல்ல வருகிற கருத்தை சொல்லவிடாமல் அவரை தாக்க முயற்சி நடத்தினர். பா.ஜ.க.,வினரின் இந்த திட்டமிட்ட ரகளையைத் தடுக்க தமிழிசை சவுந்திரராஜன் முயற்சிக்காமல் தங்கள் கட்சியினரின் ரகளையை நியாயப்படுத்திப் பேசினார். இதன் காரணமாக ஏற்பட்ட மோசமான சூழலில் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு இருந்தபோதும் ரகளையில் ஈடுபட்டவர்களைத் தடுக்க எவ்வித முயற்சியையும், போலீசார் மேற்கொள்ளவில்லை.
மேலும், ரகளையில் ஈடுபட்ட பா.ஜ.க.,வினர் மீது உரிய வழக்கைப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடைபெறவில்லை. மாறாக, தற்போது கோவை மாநகர போலீசார் பொய்யான புகாரை நிர்பந்தப்படுத்தி பெற்றுக்கொண்டு, அந்தத் தொலைக்காட்சியின் கோவை நிருபர் மீதும், இயக்குநர் அமீர் மீதும் கடுமையான பிரிவில் கோவை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கோவை போலீசாரின் இந்த நடவடிக்கை அப்பட்டமான ஜனநாயக விரோத போக்கு செயலாகும். இதனை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு ஊடகத்தினர் மற்றும் இயக்குநர் மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்பப்பெற வேண்டும். ரகளையில் ஈடுபட்ட பா.ஜ.க.,வினரை அடையாளம் கண்டு அவர்கள் மீது உரிய வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.