வடகோவை மாநகராட்சி பள்ளியில் தொடங்கியது 'நம்ம ஊரு சந்தை'

கோவை: பாரம்பரியத்துக்கு திரும்புவதோடு, உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத இயற்கை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு சந்தை', வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகின்றது.

கோவை: பாரம்பரியத்துக்கு திரும்புவதோடு, உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத இயற்கை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு சந்தை', வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகின்றது.



காலை 10 மணியிலிருந்தே கோவையைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் இந்த சந்தையை பார்வையிட்டு, செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட விளைபொருட்களை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தை மாலை 5 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இயல்வாகை என்ற தன்னார்வ அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து வருகின்றது. மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் சந்தை நடைபெறுகிறது.



இதில், இயற்கை வழி விவசாய விளைபொருட்கள், தேன், சிறு தானிய தின்பண்டங்கள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், மதிப்புக் கூட்டிய உணவுப் பொருட்கள், மர விளையாட்டு சாமான்கள் என, இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.



இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் அகிலா கூறுகையில், "பிளாஸ்டிக் பொருட்களை தடுக்கும் பொருட்டு, இங்கு பொருட்களை வாங்க வருபவர்கள் துணிப் பைகளை கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளோம். முற்றிலும் இயற்கை சார்ந்த சந்தையாக உள்ளது." என்றார்.

சந்தை குறித்து பனை பொருட்கள் விற்பனை செய்யும் விசுவநாதன் என்பவர் கூறுகையில், "இங்கு வரும் மக்களுக்கு இயற்கை சார்ந்த விவசாய பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது. பனையில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களான பைகள், கூடைகள், அழைப்பிதழ் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறேன். இதுவும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான ஒரு மாற்றாக அமைகிறது. இதனை மக்கள் வாங்கும் போது விவசாயிகளும் பயனடைவார்கள்." என்றனர்.



இந்த சந்தை மிகவும் பயனுள்ளதாகவும், அடுத்த தலைமுறையினருக்கு இந்த சந்தை இயற்கை விவசாயம் குறித்த புரிதலை உண்டாக்கும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...