தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் நேற்று பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் நூலகங்களைப் பராமரிப்பதற்கென தற்போது தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசின் இந்த அறிவிப்பு குறித்து கோவையில் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் நடத்தி வரும் கனகராஜ் கூறியதாவது :- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதனால், கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை எளிய மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது.
30 வருடங்களுக்கு முன் தமிழக அரசு சார்பாக சென்னையில் சிறப்பு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. இங்கு பயிற்சி பெற்ற பலர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக, கடந்த 8 வருடங்களில் அதிக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை உருவாக்கிய சாதனை தமிழகத்திற்கு உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் தொடங்குவதால், தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்," என்றார்.
குறிப்பாக, வழக்கமான பள்ளி ஆசிரியர்களை வைத்து தேர்வு எழுதுவோருக்கு பயிற்சி கொடுக்காமல், ஐ.ஏ.எஸ்., தேர்வில் அனுபவமிக்கவர்களை கொண்டு பயிற்சியளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளர் கனகராஜ் கோரிக்கை விடுத்தார்.