திருப்பூர்: திருப்பூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவை தொகைகளை வழங்க வேண்டும், பணிநிரவல் முறையில் ஆசிரியர் பணியிட மாறுதல் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் 20 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.