கோவை: கோவை மத்திய சிறையில் 22 ஆண்டுகளாக இருக்கும் கைதியை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
கோவை: கோவை மத்திய சிறையில் 22 ஆண்டுகளாக இருக்கும் கைதியை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, வயோதிகம் கருணை அடிப்படையில் 67 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 22 ஆண்டுகளாகக் கோவை மத்திய சிறையில் இருக்கும் தனது தந்தையை விடுதலையை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது மகன் சித்திக், மகள்கள் முபினா, ருக்ஷான ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :- தமிழக அரசு விடுதலை செய்த 67 கைதிகளில், இஸ்லாமிய கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக உயர்நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் விடுவிக்க உத்தரவிட்டும், தமிழக அரசு அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. அவர்கள் கூறியதன் பேரில், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். மனு மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்," என்றனர்.