தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கோவை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

கோவை: தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனும் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் ஆலோசனை நடத்தினார்.

கோவை: தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனும் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் ஆலோசனை நடத்தினார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது :- தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால் மாவட்டத்திலுள்ள அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைகள் துறை மூலம் பாலங்கள், சாலைகள் ஆகியவை பழுதடைந்திருந்தால் சரிசெய்திட வேண்டும், பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு தங்கு தடையின்றி விநியோகம் செய்திடவும் தேவையான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். 

மேலும், ஆற்றுக்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் உரிய முறையில் அறிவிக்கைகள் அளித்திட வேண்டும். மணல் மூட்டைகள் போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திட வேண்டும். மின்சார வாரிய அலுவலர்கள் மின்கம்பிகளிலுள்ள உள்ள பழுதுகள் உடனடியாக சரி செய்திட வேண்டும். மழைநீர் சேகரிக்க ஏற்றவகையில் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் மற்றும் குட்டைகள் ஏற்கனவே தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள குளங்களையும் விரைந்து தூர்வாரிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

வழங்கல் துறை பொதுமக்களுக்கு தேவையான அளவிற்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிட தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படா வண்ணம் சுகாதாரத்தினை பேணிகாத்திட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். 

கால்நடை பராமரிப்புத்துறையினரும், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் கிராமங்கள் தோறும் தொடர்ந்து நடத்திட வேண்டும். கால்நடைகளை மேடான பகுதிகளில் தங்கவைக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை காரணமாக பொதுமக்கள் அவசர உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 

இந்த அவசர சேவையானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகின்றது. சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து துறைஅலுவலர்களும், பணியாளர்களும் தலைமையிடத்தில் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...