நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படக்கூடிய வெள்ளக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், 24 மணிநேரம் செயல்படக்கூடிய வெள்ளக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளது.
இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது :- உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதையடுத்து, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உதகை, கூடலூர், பந்தலூர் தாலூக்காளில் மழை அதிகமாகப் பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. கடந்த இரு மாதங்களாக நிலவி வந்த இளவேனிர் காலம் முடிந்து, பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து வேளாண் நடவு பணிகளும் மாவட்டத்தில் மும்முரமடைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து தடைப்படும். மேலும், வெள்ளக் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, பருவமழை காலத்தில் ஏற்படக் கூடிய சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் திரட்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற இலவச எண்ணும் அமைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.