நீலகிரி: உதகை-அவலாஞ்சி சாலையில் ராட்சத மரம் விழுந்த விபத்து காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்த வண்ணமாக உள்ளன.

இந்த நிலையில், இன்று உதகையில் இருந்து அவலாஞ்சி செல்லும் சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்தது. இதனால், சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.