உதகை தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரகம் மெக் ஐவரின் 142-வது நினைவு தினம்

நீலகிரி: நீலகிரியில் உலக புகழ் பெற்ற உதகமண்டல அரசு தாவரவியல் பூங்காவை ஏற்படுத்தித் தந்த இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வில்லியம் கிரகம் மெக் ஐவரின் 142-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி: நீலகிரியில் உலக புகழ் பெற்ற உதகமண்டல அரசு தாவரவியல் பூங்காவை ஏற்படுத்தித் தந்த இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வில்லியம் கிரகம் மெக் ஐவரின் 142-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 

அவரது கல்லரை புனித ஸ்டீபன் பேராலய வளாகத்தில் அமைந்துள்ளது. அந்த கல்லறையில் தாவரவியல் பூங்காவைச் சார்ந்த ஊழியர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்து நாட்டின் ராயல் பொட்டானிக்கல் கார்டனில் பயிற்சியாளராக இருந்த மெக் ஐவர் கடந்த 1847-ம் ஆண்டு உதகமண்டலம் வந்து 22 ஏக்கரில் தாவரவியல் பூங்காவை ஏற்படுத்தினார். 



இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பல்வேறு தாவரங்கள், 150-க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் குளிர் மற்றும் மித தட்ப வெப்ப நிலையிலுள்ள பல்வேறு புதர்கள் அந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல தரப்பட்ட பூக்களை பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வந்து இங்கு அறிமுகப்படுத்தியவர் மெக் ஐவர். 

நீலகிரியின் இன்றைய வேளாண் வளர்ச்சிக்கு வித்திட்டவர் மெக் ஐவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...