கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தமிழக அரசு வழங்கிய வருடாந்திர ஊதிய உயர்வு தொகையை ஊழியர்களுக்கு தராமல் 108 சேவையை நடத்தி வரும் ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 8-ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஊழியர்களின் கோரிக்கைகளை, அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்திற்கு முன்னதாகவே விரைவாக நடைபெற 108 ஊழியர்களின் பொதுக்கூட்டம், போராட்டம் என பல வகையில் தங்களின் அழுத்தங்களை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக இன்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு 60-க்கும் மேற்பட்ட 108 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஓய்வில் இருந்த 108 தொழிலாளர்கள் சீருடையுடன் வந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர் பாக்யராஜ் கூறியதாவது :- ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., தனியார் நிறுவனம், தமிழக அரசாங்கம் கொடுக்கும் சம்பள உயர்வை ஊழியர்களுக்கு முழுமையாக வழங்காமல் ஏமாற்றி வருகிறது. எங்களின் நியாயமான சம்பள உயர்வை குறைத்து எங்களைப் போராட தூண்டி வருகிறது. நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்ததால், தொடர்ந்து நடைபெறும் எங்களுக்கான விரோதப்போக்கை பெரிதுபடுத்தாமல் பொறுத்துக் கொண்டோம். ஆனால், எங்களின் குடும்பம் இன்று குறைவான சம்பளத்தில் வறுமையில் இருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் எங்கள் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். அரசு உரிய முறையில் எங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும், இவ்வாறு தெரிவித்தார்

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...