கோவை: நாளை முதல் கோவை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை: நாளை முதல் கோவை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் நாளை முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், வால்பாறை, கேரளாவில் சில பகுதிகள் மற்றும் கர்நாடகா, கோவா ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெய்யவிருக்கும் மழை நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு நல்வரவாக அமையும் என்றும், நாளை முதல் அடுத்த பத்து நாட்களுக்கு இந்த மழை இருக்கும் என்றும், இந்த மழையால் அணைகள் நிரம்ப அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.