திருப்பூர்: திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள் தீயில் கருகி சேதமடைந்தன.

செல்லம் நகர் பகுதியில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான பனியன் வேஸ்ட் குடோன் உள்ளது. அந்த குடோனில் நேற்று இரவு இரண்டு மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
இதனையடுத்து, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

இதில் குடோனுக்குள் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பனியன் துணிகள் எரிந்து நாசமாகியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.