உலக சுற்றுச்சூழல் தினம் : வேளாண் பல்கலை.,யில் மரம் நடுவிழா மற்றும் மிதிவண்டி பேரணி

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மரம் நடுவிழா மற்றும் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மரம் நடுவிழா மற்றும் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. 

உலக சுற்றுச்சூழல் தினம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று (5-6-2018) கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலியல் துறையால் நடத்தப்பட்ட இவ்விழாவில் கல்லூரி ச. மகிமைராஜா, முதன்மையர் (வேளாண்மை) மறைந்த பேராசிரியர் சிவசங்கர் அவர்களின் நினைவாக அரச மரம் நட்டு மரம் நடு விழாவினைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர். 

பின்னர் நடைபெற்ற “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை” இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் தனி அலுவலர் ஜவஹர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணி பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரம், கவுலிபிரவுன் ரோடு, மருதமலை சாலை வழியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதேபோல, பார்க் குளோபல் பள்ளியிலும் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. எனவே, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...