மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உதகை நகராட்சி சேர்க்கப்படும் என மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் பினாக்கி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உதக மண்டல நகராட்சிக்குட்பட்ட காந்தள் பதியில் இயங்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை 9 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் பினாக்கி மிஸ்ரா நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நிலவும் சிறந்த ஒத்துழைப்பு காரணமாக ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடு உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அதோடு எந்த ஒரு மாநிலத்திற்கும் கிடைக்காத வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 மாநகராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. உதகமண்டல நகராட்சியில் இயங்கும் இந்தக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் 90% வீடுகள் இணைக்கப்பட்டுள்ளது. இதை 100 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில் பேசிய மதுரை மக்களவை உறுப்பினர் கோபாலகிஷ்ணன், மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாகவும், முழுமையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பது கள ஆய்வின் போது தெரிய வந்துள்ளதாகக் கூறினார். மேலும், இதற்காகப் பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.