திருப்பூர்: உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மற்றும் நீலகிரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆண்டுதோறும் ஜீன் மாதம் 5-ம் தேதி உலக சுற்று சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூரில் பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்றனர். அமர்ஜோதி பகுதியில் தொடங்கிய இந்த பேரணி நல்லூர் வரை சென்றது.

இதேபோல் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

நீலகிரி
நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பசுமை கலாம் அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா தலைமை சுற்று சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்டீபன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பசுமை கலாம் அமைப்பின் நிர்வாகி நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே அவர் பேசுகையில், "ஊட்டியை 'பியூட்டி'யாக வைப்பது உங்களது டியூட்டி. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஆலோசனைப் படி இதுவரை 30 லட்ச மரக்கன்றுகள் தமிழகத்தின் பள்ளி கல்லூரிகளில் நடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மரம் நடும் பணிகள் மேற் கொள்ளப்படும்." என்றார்.

முன்னதாக, பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதி மொழியும் எடுக்கப்பட்டது. பின்னர் பசுமை ரத விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ரவி, மாவட்ட வன அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.