மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வு. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சிறுத்தைகளின் ஊடுருவலும் இருப்பதாக அஞ்சப்படுகிறது. காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாறைப்பள்ளம், பனப்பாளையம், மேடூர், கண்டியூர் கிராமங்களில் கடந்த இரு மாத காலத்தில் இருபதிற்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த வளர்ப்பு ஆடுகளாகும். நள்ளிரவு நேரங்களில் ஆட்டுப்பட்டிக்குள் நுழையும் மர்ம விலங்கு அங்குள்ள ஆடுகளை மட்டும் குறி வைத்து தாக்கி கொன்று அதன் உறுப்புக்களை உண்டு விட்டு செல்கின்றன.

இதனால் அச்சத்தாலும், இழப்பாலும் தவித்த மக்கள் இது குறித்து தொடர்ந்து வனத்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், நேற்றிரவு மீண்டும் கெம்மாரம்பாளையம் ஊராட்சி மேடூர் கிராமத்தினுள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த நான்கு ஆடுகளை கடித்து கொன்றுள்ள நிகழ்வு இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால், உடனடியாக வனத்துறையினர் இப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கும் கிராம மக்கள், இதனால் தாங்கள் தோட்ட வேலைக்கு செல்லவோ வெளியில் நடமாடவோ கூட அச்சப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து, நிகழ்விடத்தினை ஆய்வு செய்த காரமடை வனத்துறை அதிகாரிகள் உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அந்த கிராமத்தில் நடமாடும் வனவிலங்கினை பிடிக்க நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...